Product details
- Publisher : Manjul Publishing
- Language : Tamil
- Paperback : 168 pages
- ISBN-10 : 9391242294
- ISBN-13 : 978-9391242299
- Item Weight : 160 g
- Dimensions : 14 x 21.6 x 0.4 cm
- Country of Origin : USA
About the Author
ஜெஃப் கெல்லர் ஒரு பிரபல நூலாசிரியர், பேச்சாளர், கருத்தரங்குகளைத் தலைமை தாங்கி நடத்தி வருபவர். ‘ஆட்டிடியூட் இஸ் எவ்ரிதிங்’ என்ற நிறுவனத்தின் தலைவர் அவர். சட்டம் படித்துள்ள ஜெஃப், ஒரு பேச்சாளராக ஆவதற்கு முன்பு பத்து ஆண்டுகள் ஒரு வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார். பெரும் சாதனையாளர்களை உருவாக்க விரும்புகின்ற நிறுவனங்களுடனும், தங்கள் கீழ் வேலை பார்ப்பவர்கள் நேர்மறையான மனப்போக்குடன் இருக்க வேண்டும் என்று விரும்புகின்ற விற்பனை மேலாளர்களுடனும் அவர் இணைந்து பணியாற்றி வருகிறார். மனப்போக்கு மற்றும் வெற்றி குறித்து ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் நடத்தி வந்த இதழை நார்மன் வின்சென்ட் பீலும் ஜிக் ஜிக்லரும் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
உங்களுடைய கண்ணோட்டம் எதிர்மறையானதாக இருந்தாலும் சரி, நேர்மறையானதாக இருந்தாலும் சரி, அல்லது இவ்விரண்டுக்கும் இடையே ஏதோ ஒரு நிலையில் இருந்தாலும் சரி, ஊக்குவிப்புப் பேச்சாளரும் பயிற்றுவிப்பாளருமான ஜெஃப் கெல்லர், உங்களுக்குள் ஒளிந்திருக்கின்ற ஆற்றலை எப்படி நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளலாம் என்பதையும், அந்த ஆற்றலை எவ்வாறு கட்டவிழ்த்துவிடுவது என்பதையும் சி வாய்ந்த மூன்று வழிகளின் வாயிலாக உங்களுக்குக் காட்டுவார். சிந்தனை! மனத்திலிருந்துதான் வெற்றி தொடங்குகிறது. மனப்போக்கின் சக்தியால் உங்கள் தலைவிதியை மாற்றியமைக்க முடியும். பேச்சு! உங்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை உன்னிப்பாக கவனியுங்கள். நீங்கள் பேசுகின்ற விதத்தால் உங்களுடைய இலக்குகளை நோக்கி உங்களை உந்தித் தள்ள முடியும். செயல்பாடு! ஓய்ந்து உட்காராதீர்கள்! உங்களுடைய கனவுகளை எதார்த்தமாக மாற்றக்கூடிய திட்டவட்டமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். விரைவில், நீங்கள் புத்துணர்ச்சியூட்டப் பெறுவீர்கள், புதிய சாத்தியக்கூறுகளைப் பார்ப்பீர்கள், பாதகமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு முறியடிப்பீர்கள், br>உங்களுக்கே உரிய தனித்துவமான திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். உங்களுடைய வேலையிலும் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் உங்கள் உறவுகள் மேம்படும். உங்களுக்குத் தேவையானதெல்லாம், உங்களுடைய மனப்போக்கையும் உங்களுடைய வாழ்க்கையையும் மாற்றுவதற்கான முறையான செயற்திட்டம் மட்டுமே!.